பாஜகவின் இந்த வன்முறை அரசியல் ஆபாசமானது. அறுவெறுக்கத்தக்கது – ஜோதிமணி எம்.பி
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை தாக்க முயன்ற தமிழக பாஜகவிற்கு கடுமையான கண்டனங்கள் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் அவர்கள் வருகை புரிந்தார்.
அப்போது அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின் பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை தாக்க முயன்ற தமிழக பாஜகவிற்கு கடுமையான கண்டனங்கள். பாஜகவின் இந்த வன்முறை அரசியல் ஆபாசமானது. அறுவெறுக்கத்தக்கது.
ஒரு மாநில அமைச்சரிடமே இவ்வளவு வன்முறையில் பாஜகவினர் ஈடுபடுவார்கள் என்றால் சாதாரண மக்களின் கதி என்ன? தமிழக அரசு பாஜகவின் இந்த வன்முறை அரசியலை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசு பாஜகவின் இந்த வன்முறை அரசியலை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.
— Jothimani (@jothims) August 13, 2022