இனிமேல் இந்த மரத்தை வெட்ட முடியாது…! வேளாண் பட்ஜெட் தாக்கலில் அதிரடி அறிவிப்பு..!
பனை மரத்தை வெட்ட தடை விதிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில், இந்த அறிக்கையில், பனை மரத்தை வெட்ட தடை விதிக்கப்படும் என்றும், அவ்வாறு அவசியமாக வெட்டவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், ஆட்சியரின் அனுமதி பெற்று வெட்டுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் பனை மர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனை மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாயவிலை கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும், கலப்படம் இல்லாத ஏழை மக்களிடம் கொண்டு சேர்த்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.