அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமையும்” என்று அவர் கூறியது என் இதயத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற “புதுமைப் பெண்” திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். பின்னர், அங்கு உள்ள பதிவேட்டில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து ‘அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல இந்தியாவின் பெருமை’ என்று பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தை “தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமையும்” என்று அவர் கூறியது என் இதயத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று பதிவிட்டுள்ளார்.
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை…
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…