டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய இந்த வார்த்தை என் இதயத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமையும்” என்று அவர் கூறியது என் இதயத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது   என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற “புதுமைப் பெண்” திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த  நிகழ்ச்சியில், 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். பின்னர், அங்கு உள்ள பதிவேட்டில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து ‘அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல இந்தியாவின் பெருமை’ என்று பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தை “தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமையும்” என்று அவர் கூறியது என் இதயத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்