இது பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது – எம்.பி. திருச்சி சிவா
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது என எம்.பி. திருச்சி சிவா பேட்டி.
மணிப்பூர் வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்றது. திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின் பேசிய எம்.பி. திருச்சி சிவா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூருக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தென்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு உள்ளது. ஆனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது; இது பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.