கோயம்பேட்டில் இந்த சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயர்.. முதல்வர் அறிவிப்பு..!
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது “பொது இடத்தில் கேப்டன் விஜயகாந்த்திற்கு மணிமண்டபம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.
இந்நிலையில், கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் என பெயரிடப்படும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த செய்தி விஜயகாந்த் ரசிகர்கள், தேமுதிகவினர் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.