“பெண்களின் கல்வி வளர்ச்சி,எதிர்காலத்திற்கு இந்த புரட்சிகர முடிவு உதவும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!

Default Image

உலக அளவில் இந்திய பெண்கள் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும், தாய்மையும்தான் காரணம் என்றும்,தற்போது பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும்,எதிர்காலத்திற்கும் இந்த புரட்சிகர முடிவு உதவும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,தனது உரையின்போது பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.எனினும்,இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும், அதன்பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்.

அதன்படி,நடப்பு கூட்டத்தொடரிலேயே பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.குழந்தை திருமணத்தை தடுக்கும் நோக்கில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும்,பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் இந்த புரட்சிகர முடிவு உதவும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

“பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் இந்த புரட்சிகர முடிவு உதவும்.

உலக அளவில் இந்திய பெண்கள் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும், தாய்மையும் தான் காரணம் ஆகும். பெண்கள் திருமணம் குறித்து முடிவெடுக்கும் பக்குவத்தை அடைய 21 வயது நிறைவடைய வேண்டியது அவசியமாகும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு தான் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. கர்நாடக உயர்நீதிமன்றமும் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த பரிந்துரை அளித்திருந்தது.

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும் என்பதை பிரதமரும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருந்தார். இப்போது சட்டமே தயாராகி விட்டது. இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டால் அது பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்