மக்களை தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது – முதல்வர் மு.க ஸ்டாலின்!

Published by
பாலா கலியமூர்த்தி

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய பெயரை தந்து கொண்டியிருக்கிறது என முதல்வர் பெருமை.

சென்னை மருத்துவ கல்லூரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு தனி மையம் தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலையில் இருக்கும் மக்களை கை தூக்கிவிட கூடிய அரசுதான் திமுக அரசு. மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய பெயரை தந்து கொண்டியிருக்கிறது என பெருமையுடன் தெரிவித்தார்.

நாள்தோறும் கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு வர முடியாதவர்கள், பணம் இல்லாதவர்கள், தீராத நோயாளிகள் ஆகியோருக்கு கவலையை போக்க கூடிய திடமாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

அரசை தேடி மக்கள் வந்த காலம் இருந்தது. ஆனால் தற்போது மக்களை தேடி அரசு செல்ல கூடிய காலமாக இந்த ஆட்சி உருவாகியுள்ளது குறிப்பிட்டார். மேலும்,  முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்தின் 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…

6 minutes ago

“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…

6 minutes ago

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 3 மாவட்டங்களுக்கு அடுத்த அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…

1 hour ago

“நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேக்குறாங்க..” கடை ஓனர் பரபரப்பு குற்றசாட்டு!

நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…

2 hours ago

வந்துட்டேனு சொல்லு திரும்ப…156.7 கிமீ வேகத்தில் அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீக்கு என்ன நடந்தது? உண்மையை உடைத்த நெருங்கிய நண்பர்!

சென்னை :  ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…

3 hours ago