மக்களை தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது – முதல்வர் மு.க ஸ்டாலின்!
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய பெயரை தந்து கொண்டியிருக்கிறது என முதல்வர் பெருமை.
சென்னை மருத்துவ கல்லூரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு தனி மையம் தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலையில் இருக்கும் மக்களை கை தூக்கிவிட கூடிய அரசுதான் திமுக அரசு. மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய பெயரை தந்து கொண்டியிருக்கிறது என பெருமையுடன் தெரிவித்தார்.
நாள்தோறும் கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு வர முடியாதவர்கள், பணம் இல்லாதவர்கள், தீராத நோயாளிகள் ஆகியோருக்கு கவலையை போக்க கூடிய திடமாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
அரசை தேடி மக்கள் வந்த காலம் இருந்தது. ஆனால் தற்போது மக்களை தேடி அரசு செல்ல கூடிய காலமாக இந்த ஆட்சி உருவாகியுள்ளது குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்தின் 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.