அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் பெய்துள்ள இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது .
வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களும் சென்னையில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். டிச.1முதல் 5 ஆம் தேதி வரை சென்னையில் அதிகபட்சமான மழைப்பொழிவு 5 செ.மீ என்பார்கள். ஆனால், இப்பொது நுங்கம்பாக்கத்தில் 58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 12 மடங்கு கூடுதலாக மழை பொழிந்துள்ளது.
தற்போது மழைநீர் வடிகால்களில் மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. சென்னையில் பிரதான தெருக்களில் மழைநீர் வடிந்துள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி நீர்திறப்பு பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. இன்னும் சில மணிநேரங்களில், பாதிப்பு உள்ள பகுதிகள் சீரமைக்கப்படும். போக்குவரத்து 60% சீராக உள்ளது. முதல்வர் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றார். அனைத்து இடங்களிலும் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…