மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
நேற்று மதுரை தனியார் விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தெற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளதாகவும், மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு; போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரி அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது; முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் இது நடக்கிறது. டைடல் பார்க் கட்டுவது சிறுவர் பூங்கா அமைப்பது போல அல்ல; அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கி டைடல் பார்க் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…