இந்த செய்திதான் கழகச் செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேயக் கடமைக்கான அங்கீகாரம் – முதல்வர் ட்வீட்

Default Image

கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்கு சிரமபடவில்லை என்ற செய்திதான் கழக செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேய கடமைக்கான அங்கீகாரம் ஆகும்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் சென்று ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இதனையடுத்து, இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘வரலாறு காணாத மழை பெய்து இருக்கும் இடர்மிகு சூழலில் நிவாரண பணிகளில் கழகத்தினர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வரும் செய்திகள் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்கு சிரமபடவில்லை என்ற செய்திதான் கழக செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேய கடமைக்கான அங்கீகாரம் ஆகும்.

கழக நிர்வாகிகள் அனைவரும் ஏழை எளிய மக்களின் உணவு மற்றும் உடைமைக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும். மக்களை இன்னலின்றி காப்பாற்றிட உழைத்திடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.’ என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்