இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் – கே.பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ‘ராஜினாமா’ செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, மறைமுகத் தேர்தலில் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், முதல்வரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.