இன்று காலை தயாரிப்பாளர் சங்கத்தின் சீல் அதிகாரிகளால் அகற்றப்படும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அச்சங்க தலைவர் விஷால் மீது குற்றம் சாட்டினர்.இந்த முறைகேடுகள் தொடர்பாக விஷால் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி, சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் பூட்டு போட்டு விட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நடிகர் விஷால் வந்தார்.விஷால் மீது குற்றச்சாட்டுகள் கூறி, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்ட நிலையில், பூட்டை அகற்ற விஷால் முயற்சி செய்தார் .
இதனால் அலுவலக வாசலில் நிற்கும் போலீசாருடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் விஷால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிர்தரப்பினரால் போடப்பட்ட பூட்டை பதிவுத்துறை அதிகாரிகள் திறந்தனர்.
இதன் பின் விஷால் மீது 2 பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.சட்ட விரோதமாக கூடுதல் மற்றும் பிரச்சினைக்குரிய சொத்துக்கள் குறித்து தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதன் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதன் பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வட்டாட்சியர் சீல்வைத்தார்.வட்டாட்சியர் கூறுகையில், இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சகட்ட மோதலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்தார்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது சட்ட விரோதமாக நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து விஷால் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.மனுவாக தாக்கல் செய்தால் மதியம் விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி விசாரித்த உயர்நீதிமன்றம் சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அரசியல் என்பது ஒரு தனிப்பட்ட நபர்களுக்காக ஒதுக்கப்பட்டது அல்ல. யார் வேண்டுமானாலும் வரலாம். மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இளைஞர்கள் அரசியல் ஈடுபட வேண்டும் என்பதே என் நோக்கம்.
தயாரிப்பாளர் பிரச்னையில் நல்ல முடிவு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்துக்கு நன்றி.இன்று காலை 9:30 மணிக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சீல் அதிகாரிகளால் அகற்றப்படும்.
தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் .எந்த குற்றச்சாட்டு என்றாலும் தயாரிப்பாளர்சங்க அலுவலகத்திற்கு வந்துஉறுப்பினர்கள் வைக்கலாம். இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியை தடுப்பதில் என்ன நோக்கம் இருக்குமென்று தெரியவில்லைஎன்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…
செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த…
புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…
சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…