திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகளும் இதனை எதிர்கின்றன என்று விசிக குழுத் தலைவர் சிந்தனை செல்வன் கூறியுள்ளார்
தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் இன்று கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக, விசிக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழமை மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர்கள் விளக்கம் :
இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் தங்க தென்னரசு மற்றும் கணேசன் ஆகியோர் இதுகுறித்து விளக்கம் அளித்தனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு :
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறுகையில், ‘நெகிழ்வுத்தன்மை மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். எல்லா நிறுவனங்களுக்குமல்ல, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காகவே இந்த சட்டம்; வேலை பார்க்கக்கூடியவர்கள் அவர்களாக விரும்பினால் தேர்வு செய்யலாம்; 4 நாட்கள் பணியாற்றி 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம், அல்லது வேறுபணியை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கணேசன் :
அமைச்சர் கணேசன் அவர்கள் கூறுகையில், தொழிலார்களின் விருப்பமின்றி 12 மணிநேர வேலை வழங்க கூடாது. மின்னணுவியல், ஐடி நிறுவனங்கள், காலணி ஆலைகள் 12 மணி நேர வேலையை எதிர்பார்க்கின்றன. முதலீடு செய்ய வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத் தன்மையை விரும்புகின்றன என தெரிவித்துள்ளார்.
விசிக சிந்தனை செல்வன்:
மேலும், விசிக குழுத்தலைவர் சிந்தனை செல்வன், திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகளும் இதனை எதிர்கின்றன என்று கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் யார் மீதும் திணைக்கப்படாது என்று அமைச்சர்கள் கூறுகின்றனர், தொழிலாளர்கள் தங்களாகவே விரும்பினால் மட்டுமே இந்த நேர நீட்டிப்பு துயரப்படும் என்று கூறுகின்றனர், ஆனால் நடைமுறையில் தொழிலாளர்கள் விரும்புவது போல ஒரு பாவனை உருவாக்கப்பட்டு தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு இந்த சட்டம் வழிவகுக்கும். எனவே, இந்த சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…