இந்த சட்டம் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது..! கூட்டணி கட்சிகள் பேட்டி..

Default Image

திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகளும் இதனை எதிர்கின்றன என்று விசிக குழுத் தலைவர் சிந்தனை செல்வன் கூறியுள்ளார்

தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் இன்று கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக, விசிக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழமை மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

அமைச்சர்கள் விளக்கம் :

இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் தங்க தென்னரசு மற்றும் கணேசன் ஆகியோர் இதுகுறித்து விளக்கம் அளித்தனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு :

thangam thennarasu

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறுகையில், ‘நெகிழ்வுத்தன்மை மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். எல்லா நிறுவனங்களுக்குமல்ல, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காகவே இந்த சட்டம்; வேலை பார்க்கக்கூடியவர்கள் அவர்களாக விரும்பினால் தேர்வு செய்யலாம்; 4 நாட்கள் பணியாற்றி 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம், அல்லது வேறுபணியை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கணேசன் :

ganesan

அமைச்சர் கணேசன் அவர்கள் கூறுகையில், தொழிலார்களின் விருப்பமின்றி 12 மணிநேர வேலை வழங்க கூடாது. மின்னணுவியல், ஐடி நிறுவனங்கள், காலணி ஆலைகள் 12 மணி நேர வேலையை  எதிர்பார்க்கின்றன. முதலீடு செய்ய வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத் தன்மையை விரும்புகின்றன என தெரிவித்துள்ளார்.

விசிக சிந்தனை செல்வன்:

SindhanaiSelvan

மேலும், விசிக குழுத்தலைவர் சிந்தனை செல்வன், திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகளும் இதனை எதிர்கின்றன என்று கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் யார் மீதும் திணைக்கப்படாது என்று அமைச்சர்கள் கூறுகின்றனர், தொழிலாளர்கள் தங்களாகவே விரும்பினால் மட்டுமே இந்த நேர நீட்டிப்பு துயரப்படும் என்று கூறுகின்றனர், ஆனால் நடைமுறையில் தொழிலாளர்கள் விரும்புவது போல ஒரு பாவனை உருவாக்கப்பட்டு தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு இந்த சட்டம் வழிவகுக்கும். எனவே, இந்த சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi