இதனால்தான், மக்களை வஞ்சிப்பதில் பழனிசாமியும், ஸ்டாலினும் ஒன்று எனச் சொல்லுகிறோம் – டிடிவி தினகரன்
முந்தைய பழனிசாமி அரசு ஆரம்பித்து வைத்த ஏழை, எளிய முதியோரை வஞ்சிக்கும் இந்தப் படுபாதகத்தை ஸ்டாலின் அரசும் தொடர்வது வேதனைக்குரியது என டிடிவி தினகரன் ட்வீட்.
ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், அத்திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவதை நிறுத்தியும் வைத்திருப்பதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட்.
ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், அத்திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவதை நிறுத்தியும் வைத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட எத்தனையோ வாக்குறுதிகளைப்போல முதியோர் ஓய்வூதியத்தொகை ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் காற்றில் பறந்துபோய் விட்டது.
உறுதியளித்தபடி உதவித்தொகையை உயர்த்தவில்லையென்றாலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்ததை குறைப்பதும், புதியவர்களுக்கு வழங்க மறுப்பதும் பச்சை துரோகமாகும்.முந்தைய பழனிசாமி அரசு ஆரம்பித்து வைத்த ஏழை, எளிய முதியோரை வஞ்சிக்கும் இந்தப் படுபாதகத்தை ஸ்டாலின் அரசும் தொடர்வது வேதனைக்குரியது. இதனால்தான், மக்களை வஞ்சிப்பதில் பழனிசாமியும், ஸ்டாலினும் ஒன்று எனச் சொல்லுகிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
முந்தைய பழனிசாமி அரசு ஆரம்பித்து வைத்த ஏழை, எளிய முதியோரை வஞ்சிக்கும் இந்தப் படுபாதகத்தை ஸ்டாலின் அரசும் தொடர்வது வேதனைக்குரியது. இதனால்தான், மக்களை வஞ்சிப்பதில் பழனிசாமியும், ஸ்டாலினும் ஒன்று எனச் சொல்லுகிறோம். (4/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 25, 2022