இதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம் – ஜோதிமணி எம்.பி
மாணவர்களுக்கு நீட் எவ்வளவு பெரிய அநீதி என்பதை சொல்லும் திரு.ராஜன் கமிடியின் புள்ளிவிவரம். இதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம் என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது.இதனையடுத்து,பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு ஏ.கே.ராஜன் குழு,நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, நீட் தொடர்ந்தால், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த நிலைக்கு தமிழகம் சென்று விடும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு எச்சரிக்கை விடுத்துள்ள அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அரசு பள்ளிகளில்,தமிழ் வழியில்,போராடி படித்து மருத்துவராக கனவு காணும் மாணவர்களுக்கு நீட் எவ்வளவு பெரிய அநீதி என்பதை சொல்லும் திரு.ராஜன் கமிடியின் புள்ளிவிவரம். இதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து
அரசு பள்ளிகளில்,தமிழ் வழியில்,போராடி படித்து மருத்துவராக கனவு காணும் மாணவர்களுக்கு நீட் எவ்வளவு பெரிய அநீதி என்பதை சொல்லும் திரு.ராஜன் கமிடியின் புள்ளிவிவரம். இதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம். pic.twitter.com/ey5LR5pnBV— Jothimani (@jothims) September 21, 2021