திமுக அரசு ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்ப பெறுமாறு வேண்டுகோள் விடுத்து சசிகலா அறிக்கை.
உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சசிகலா அவர்கள் திமுக அரசு ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்ப பெறுமாறு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘திமுக அரசு ஆவின் பொருட்களுக்கு விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது, ஒவ்வொரு நாளும் திமுக அரசு தாங்கமுடியாத சுமைகளை தமிழக மக்கள் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருக்கிறது. இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
திமுக அரசு கடந்த மார்ச் மாதம் தான் நெய், பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியிருந்தது. அதாவது, ஆவின் நெய் லிட்டருக்கு 30 ரூபாய் வரையிலும், பால் பவுடர் 1 கிலோ 40 ரூபாய், பாதாம் பால் பவுடர் 1 கிலோ 100 ரூபாய், தயிர் லிட்டருக்கு 6 ரூபாய் என்ற அளவுக்கு கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது நெய் விட்டருக்கு 45 ரூபாய். தயிர் லிட்டருக்கு 10 முதல் 20 ரூபாய் வரையிலும், லஸ்ஸி 200 மி.லி. 2 முதல் 3 ரூபாய் வரையிலும் மீண்டும் உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது போன்ற நடவடிக்கைகளால் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், அவர்களின் விற்பனையை அதிகரிக்கவும் தமிழக அரசே உதவுவதாக அமைந்துவிடும். இதற்காகவா தமிழக மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுகிறது; அதேபோன்று மத்திய அரசும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…