தொடர் குண்டு வீச்சு சம்பம் தொடர்பாக காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்.
தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகிறது. பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.
அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். தற்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…