‘தமிழக வெற்றிக் கழகம்’ அர்த்தம் இது தான்! வீடியோவாக விளக்கிய விஜய்!

மாநாட்டு மேடையில் விஜய் பேசிய பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் பெயருக்கான விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டார் விஜய்.

tamilaga vettri kazhagam

விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது விழுப்புரத்தில் உள்ள வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திறன்களை மேடையில் அறிவித்தனர்.

அதன்பின், இறுதியாக தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அதில், தான் அரசியலுக்கு வந்த காரணம், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த காரணம் என அனைத்தையும் விளக்கி கூறினார். அதன் பிறகு, வீடியோவாக தவெக கட்சியின் பெயர் விளக்கத்தை கூறியிருந்தார் விஜய்.

தவெக பெயர் காரணம் :

தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் காரணம் விளக்கிய அந்த வீடியோவில் விஜய் குரலில் விளக்கப்பட்டது என்னவென்றால்,

வெற்றி :

அரசியல் மட்டும் அல்ல பொதுவாகவே நமக்கு ஒரு பெரிய அடையாளம் வேண்டும் என்றால் நம் பெயரே ஒரு அடையாளமாக மாறவேண்டும்.

அதுக்கு அப்படி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி அந்த பெயரில் இருக்க வேண்டும். அப்படி ஒரு வலிமை அந்த பெயரின் வார்த்தைகளில் இருக்கும் வலிமை தான். அப்படி ஒரு நேர்மறை அடர்த்தியும், நேர்மறை அர்த்தமும் , நேர்மறை அதிர்வும், நேர்மறை வலிமையும் ஒரு சேர கொண்ட ஒரு சொல் இருக்கும்.

என்றைக்குமே தன்னுடைய தன்மையை இழக்காத ஒரு சொல் இருக்கும். அந்த வார்த்தையை சொல்லும் தனி நபர் மட்டுமல்ல ஒரு கூட்டத்தையே உச்சத்தில் வைக்கின்ற ஒரு சொல் அது, நம்மை உற்சாகப் படுத்துகிற சொல் அது. நம் மக்களின் நாடி, நரம்புகளின் நானேற்றும் அந்த சொல். அது தான் வெற்றி.

வெற்றி என்றால் நினைத்தை மிச்சம் மீதி இல்லாமல் செய்து முடிப்பது. நம் மனதிர்க்குள் இருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவது. அதற்கு வாகை சூடுவது என பல அர்த்தங்களும் உண்டு. அப்படி ஒரு வார்த்தை தான் நம் கட்சியின் மையச் சொல்லாவும், மந்திர சொல்லவும் மாறி இருக்கிறது.

தமிழகம் :

நம் மக்களுக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் சொல்கிறது போல ஒரு வார்த்தை தான் கட்சியின் முதல் பெயராக இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். அப்படி தேர்ந்தெடுத்து தான் இந்த ‘தமிழகம்’ எனும் வார்த்தை.

தமிழகம் என்றால் தமிழர்களின் அகம். தமிழர்கள் வாழும் இடம் என்றும் சொல்லலாம். புறநானுறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து போன்ற இலக்கியத்தில் இடம்பெற்ற வார்த்தை தான் இந்த தமிழகம். அதை தமிழை நன்றாக, முறையாக, ஆழமாக படித்தவர்கள் தான் நமக்கு கற்று கொடுத்தார்கள்.

இந்த தமிழகத்தை தான் காலப்போக்கில் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் ‘தமிழ் நாடு’ என்று மாற்றப்பட்டது எல்லாரும் அறிந்த வரலாறு.

கழகம் :

கழகம், என்றால் படைப் பயிலும் இடம் என்று ஒரு அர்த்தம் உண்டு. அதாவது இளம் சிங்கங்கள் பயிலும் இடம் தான் நம்ம கட்சி. நம் கழகம் அதனால், இந்த கழகம் என்ற வார்த்தையும் சரியாகவே பொருந்தி இருக்கிறது.

இப்படி தமிழகம், வெற்றி, கழகம் என 3 வார்த்தைகளைக் மூண்டெழுந்து இருக்கும் அரசியல் உலகில் அணையாப் பெருஞ்சுடர் தான் இந்த ‘தமிழக வெற்றிக் கழகம்’. அதனைத் தொடர்ந்து, பெரும் புயலையும், சூறாவளியையும் ஒளிச்சு வச்சிருக்குற ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளின் நாதமும் சேர்ந்தது தான் நம் கட்சியின் அடையாளமாக நிற்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்