இதில் தான் இன்றைய “இந்திய அரசியல்”இருக்கிறது – சு.வெங்கடேசன் எம்.பி
குடியரசுத்தலைவர் உரை 87 பத்திகளை கொண்டது. அதில் “தொழிலாளர்” என்ற சொல் கிடையாது என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
நாடு முழுவதும் அதானி குழுமத்துக்கு எதிராக குரல் எழுந்துள்ளது. சமீப நாட்களாக மோசடியில் ஈடுபட்ட அதானி குழுமத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அதானி குழுமம் பங்குச்சந்தை மோசடி தொடர்பாக விவாதிக்கக்கோரியும், விசாரணை நடத்த கோரியும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது, பல்வேறு கேள்விகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசும், பிரதமர் மோடியும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், குடியரசுத்தலைவர் உரை 87 பத்திகளை கொண்டது. அதில் “தொழிலாளர்” என்ற சொல் கிடையாது. அந்த உரையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர உரையில் “அதானி” என்ற சொல் கிடையாது. இந்த இரண்டுக்குமான காரணத்தை புரிந்து கொள்வதில் தான் இன்றைய “இந்திய அரசியல்”இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
குடியரசுத்தலைவர் உரை 87 பத்திகளை கொண்டது.
அதில் “தொழிலாளர்” என்ற சொல் கிடையாது.அந்த உரையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர உரையில் “அதானி” என்ற சொல் கிடையாது.
இந்த இரண்டுக்குமான காரணத்தை புரிந்து கொள்வதில் தான் இன்றைய “இந்திய அரசியல்”இருக்கிறது. pic.twitter.com/xORZDVbtPr
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 15, 2023