வீராங்கனை பிரியா இறப்பதற்கு முன்பு நடந்தவை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
அதில் பேசிய அமைச்சர், வீராங்கனை பிரியா இறந்த போதும் அதற்க்கு முன்னரும் முன்னெடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். அவர் கூறுகையில், ப்ரியாவின் கால் அகற்றப்பட்டது தெரிந்ததும், நான் அங்கு சென்றுவிட்டேன். எங்கையாவது தவறு நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவிட்டு, விசாரணை நடத்த குழு அமைத்தேன். அவர்கள் கவனக்குறைவால் தான் இது நடந்தது என கூறினர்.
உடனே அப்போது சம்பந்தப்பட்ட இரு மருத்துவர்களையும் இடமாற்றம் செய்தோம். ஒருவர் தூத்துக்குடி மருத்துவமனைக்கும், ஒருவர் திருநெல்வேலி மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். அதனை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தேன்.
அதன் பிறகு அந்த குழந்தையை (ப்ரியா) நான் சந்தித்து பேசினேன். அதன் பிறகு குடும்பத்தாரிடம் பேசினேன். பிரியாவுக்கு காயம் சரியானதும், பெங்களூருவில் இருந்து பேட்டரி கால் அரசு செலவில் வாங்கி தருகிறோம். என கூறினேன். அதற்கான அளவுகளை எடுக்கவும் கூறியிருந்தேன். அப்போது பிரியாவின் தந்தை பிரியாவுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்குமாறு கேட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக நான் உறுதி கூறினேன்.
அதன் பிறகு இரவு ரத்த கசிவு ஏற்பட்டு சிறுநீரகம் செயல் இழந்து உயிர் பிரிந்தது. காலை 7 மணிக்கு இதனை டீன் என்னிடம் கூறினார். 7.15க்கு நான் மருத்துவமனை வந்துவிட்டேன். உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் என பிரியாவின் தந்தை கூறினார். நான் உடற்கூறாய்வு வேண்டும் அப்போது தான் மருத்துவர்கள் தவறு செய்தால் உடனடியாக தெரிந்துவிடும் என கூறி சம்மதிக்க வைத்தேன். என அன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிகழ்வுகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…