#TodayPrice:வாகன ஓட்டிகளே…இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் இதுதான்!

Published by
Edison

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்ட நிலையிலும்,நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து காணப்பட்டது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு 114 டாலரைத் தாண்டியதால் பெட்ரோல்,டீசல் விலையை மீண்டும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.எனினும்,கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக,எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இந்நிலையில்,சென்னையில் இன்று 14-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல,டெல்லி-மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.அதன்படி,

  • டெல்லி பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.105.41 மற்றும் டீசல் ரூ.96.67 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
  • மும்பையில் இன்று எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.120.51 மற்றும் டீசல் ரூ.104.77-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
  • கொல்கத்தாவிலும் எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.115.12 மற்றும் டீசல் ரூ.99.83-க்கும் விற்பனை.

எனினும்,கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயரவில்லை என்றாலும் கூட அவை மேலும் பெருமளவில் குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பெரும் விருப்பமாக உள்ளது.

Recent Posts

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

1 hour ago

வீங்கிய வயிற்றுடன் உயிருக்கு போராடும் நடிகர் அபினய்! கல்லீரல் நோயால் அவதி…

சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…

1 hour ago

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…

2 hours ago

பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில்,   மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…

3 hours ago

வெயிலுக்கு ஜில்..ஜில்.! மழை அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…

3 hours ago

விகடன் இணையதள தடை நீக்கம்! ஆனால்.? சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…

4 hours ago