திராவிட இயக்கத்தின் வெற்றியே இதுதான் ! – அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழர்கள் யாரும் வடமாநிலங்களுக்கு சென்று வேலை தேடும் நிலை இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதற்க்கு அரசியல் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் மனோ தனகாரஜ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மொழி உரிமையை பாதுகாக்க தோன்றிய இயக்கம் திமுக! பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது.
இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டிற்கு பிழைப்புகாக வேலை தேடி வருகின்றனர். தமிழர்கள் யாரும் வடமாநிலங்களுக்கு சென்று வேலை தேடும் நிலை இல்லை. திராவிட இயக்கத்தின் வெற்றியே இதுதான்.’ என பதிவிட்டுள்ளார்.