தேர்வு நடத்த இதுவே சரியான தருணம் – தமிழக அரசு வாதம்.!
தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த, வழக்கை இன்று காலை விசாரித்த நிலையில், மதியம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டநிலையில், தற்போது விசாரணை மீண்டும் தொடங்கியது.
உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார். அப்போது, வரும் நாள்களில் கொரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால் தேர்வு நடத்த இதுவே சரியான தருணம் என தமிழக அரசு வாதம்.
நிபுணர்களின் கருத்துப்படி தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால், திட்டமிட்ட தேதியில் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளித்தால், மாணவர்களுக்கு கவசம் வழங்குதல் போன்ற பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.