திமுகவில் இருந்து சுப்புலட்சுமி விலகியதற்கு இதுதான் காரணம் – டி.கே.எஸ். இளங்கோவன்

Default Image

சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கான காரணத்தை ஏற்றுக்கொண்டோம் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி.

திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த விலகல் அறிக்கையில், 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.

இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று துணை பொதுச்செயலாளர் பதிவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் முக ஸ்டாலினுக்கு அனுப்பிவிட்டேன் என தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால், திமுக மீது உள்ள அதிருப்தியும், கணவர் ஜெகதீசன் திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வரும் நிலையிலும், சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் அவர் இடத்தில் வேறு யார் என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், உடல்நலக்குறைவால் திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியுள்ளார். சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கான காரணத்தை ஏற்றுக்கொண்டோம். திமுக சட்ட விதிப்படி துணை பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்படுவர்கள். அதில் ஒருவர் மகளிராகவும், ஒருவர் தாழ்த்தப்பட்டவராகவும் கட்டாயமாக இருப்பார்கள். இந்த ஆண்டு பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் வர உள்ளது என விளக்கமளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்