சசிகலாவின் இடத்திற்கு தான் வரவேண்டும் என நீண்ட நாட்களாகவே டிடிவி தினகரன் திட்டம் தீட்டி வந்தார் என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா தீவிர அரசியல் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென நான் அரசியல் இருந்து ஒதுங்குவதாக நேற்று சசிகலா அறிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவின் இந்த அறிவிப்பு பலரையும் பலவிதமாக யோசிக்க வைக்கிறது. அரசியலில் ஒதுங்குவதற்கு பலரும் பல காரணங்கள் கூறி வருகிறன்றனர்.
இந்நிலையில் சசிகலா அறிவிப்பிற்கு இது தான் காரணம் என்று அவரது சகோதரர் திவாகரன் கூறுகையில், எங்க குடும்பத்தில் இருக்கிற சிலர் நானே முதல் மந்திரி, நானே ராஜா என்று கூறிக்கொண்டு ஒருத்தர் சுற்று வருகிறார். அவர் பிடியில் தான் சசிகலா இருந்தார்கள். அவர் தன்னுடைய முடிவை சசிகலா மீது திணித்து அரசியலை விட்டு ஒதுங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார்.
தானே செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார், அவரே தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துக்கொள்கிறார். அமமுகவுடன் அதிமுக சேர்ந்தால் இணைத்துக் கொள்வோம் என்று கூறுகிறார். இதுபோன்று அடாவடித்தனமாக வேலைகளை செய்து வருகிறார். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.
சசிகலாவை வெளியேத்திவிட வேண்டும் என்றும் அந்த இடத்திற்கு தான் வரவேண்டும் எனவும் நீண்ட நாட்களாகவே திட்டம் தீட்டி வந்தார். அதை தற்போது செய்து முடித்துவிட்டார். இதானால் சசிகலா எடுத்த முடிவு நல்ல முடிவு, ஏனென்றால் துரோகிகள் அவர்களை இறக்கிவிட்டு, திரும்ப திரும்ப பலிகடாகத்தான் ஆக்குவார்கள், அதிலிருந்து தப்பித்ததகத்தான் நான் நினைக்கிறன் என கூறியுள்ளார்.
சசிகலாவிற்கும் தற்போது 67 வயது ஆகிவிட்டது, அவரது உடல்யின்மை, அமைதியான வாழ்க்கையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் என தெரிவித்துள்ளார். சசிகலாவின் ஒரே சதோதரர் என்று நான் யோசிக்கும் போது அரசியல் முக்கியமா? உடல்நிலை முக்கியமா என்ற நிலைப்பாட்டில், சசிகலாவின் அறிவிப்பு நல்ல முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முடிவு, சில பேர் குறுக்கே புகுந்து மாங்கா அடிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இது பெரிய இடியாக இருக்கும். இதுக்கு அப்புறம் அதிமுக தொண்டர்கள், சசிகலாவுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு என்ன ஆகும் என்று யோசித்து பார்த்து நல்ல முடிவு எடுத்து அதிமுகவிற்கு செல்ல வேண்டும். மீண்டும் அம்மாவின் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைவதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என சசிகலா கூறியதை நானும் வழிமொழிகிறேன் என தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…