கடந்த 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்…! ப.சிதம்பரம் கிண்டல்…!
கடந்த 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருப்பதற்கு காரணம் குறித்து ப.சிதம்பரம் ட்வீட்.
பெட்ரோல், டீசல் விலை சர்வதேச எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில், ஏற்றம், இறக்கம் காணபப்டுவதுண்டு. நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த 21 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி உள்ளது .
இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது தொடர்பாக விமர்சித்துள்ளார். கடந்த 21 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஏனெனில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை மாதம் 19-ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் ஆகிறது.
பெகாசஸ் மென்பொருள் கருவி செல்போனில் ஊடுருவி இருப்பதாலும், இஸ்ரேலியர்கள் கேட்டு கொண்டிருப்பதாலும் எண்ணை நிறுவனங்களின் சந்தை படுத்துதல் தலைமை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அனைத்து துறையின் தலைமை அதிகாரிகள் 15-ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவற்றின் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
c) All the chiefs are in quarantine until
15th Augustd) All of the above
— P. Chidambaram (@PChidambaram_IN) August 5, 2021