ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான் – அதிமுக தரப்பு

Default Image

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதியாகவில்லை என ஈபிஎஸ் தரப்பு வாதம் 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கேட்டும், அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில்,  இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஓபிஎஸ் தரப்பு வாதம் 

ops26

ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது, கட்சியில் இருந்து தன்னை நீக்கியது கட்சி தலைவர் எம்ஜிஆர் வகுத்த கொள்கைக்கு எதிரானது என்றும், இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது என  அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் போட்டியில் நான் போட்டியிட தயார் எனவும், நிபந்தனைகளை மாற்றினால் தான் போட்டியிட தயார் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈபிஎஸ் தரப்பு வாதம் 

ஓபிஎஸ் தரப்பு வாதத்தை தொடர்ந்து, ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதிமுக தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் அவர்கள் பேசுகையில்,  எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொது செயலாளர் என உலகத்துக்கே தெரியும்.

உச்சபட்ச அதிகாரம் பெற்ற பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. பொதுக்குழு முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதியாகவில்லை.

அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நட்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஓபிஎஸ் நடந்து கொண்டார். கட்சி அலுவலகத்தை சூறையாடியதே ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் தரப்பினரை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்திலும், மக்கள் மன்றத்திலும் பலத்தை நிரூபிக்க வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தனக்கென தனி கட்சி நடத்தி வருகிறார். அதிலிருந்து எங்களை நீக்கி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் புதிதாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். இதனால், யாருக்கும் ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படவில்லை. ஓபிஎஸ் தனது சொந்த சகோதரரையே எந்த நோட்டீஸும் கொடுக்காமல் கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation