கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாததற்கு இதுதான் காரணம்…! – சீமான்

Default Image

ஒருவரை வீழ்த்துவது முக்கியமில்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.  சீமான், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்த்துப் போட்டியிடாதது ஏன் என்று விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு மக்கள் நலன் தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியமில்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். எனவேதான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல், திருவொற்றியூர் தொகுதியை தேர்வு செய்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்