நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்ததற்கு இது தான் காரணம்…! – குஷ்பூ
நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காகவே நடிகர் விஜய் சைக்கிளில் சென்றார். விஜய் சைக்கிளில் சென்றதை அரசியலாக்க வேண்டாம்.
சட்டமன்ற தேர்தலில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே மிகவும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு செய்து வருகிறனர். அந்த வாகையில், திரையுலக பிரபலங்களான கமல், ரஜினி, அஜித், சூர்யா, கார்த்தி மற்றும் சிவகாரத்திகேயன் ஆகியோர் வாக்களித்த நிலையில், தளபதி விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு, சைக்கிளில் வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
நடிகர் சைக்கிளை வந்து வாக்கு பதிவு செய்துள்ளது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. பலரும், தளபதி விஜய் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தான் சைக்கிளில் சென்று வாக்களித்ததாக கூறி வருகின்றனர். இதுகுறித்து, ஆயிரம்விளக்கு தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பூ கூறுகையில், நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காகவே நடிகர் விஜய் சைக்கிளில் சென்றதாகவும், விஜய் சைக்கிளில் சென்றதை அரசியலாக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.