மத்திய அரசை ஆதரிக்க காரணம் இது தான் – ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்

அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில் , தமிழ்நாட்டின் அரசியல், நேற்று இன்று நாளை என எப்போதும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை சுற்றியே சுழலும்.அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் தொண்டனாக இருப்பதே பெருமை.மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுத்து, அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
பல சோதனை, வேதனைகளை தாண்டி, அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றியவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா.தொண்டனின் உழைப்பு, சிந்திய ரத்தம் வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெரும் நோக்கத்திற்காக மத்திய அரசை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.