மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சொல்வதற்கான காரணம் இதுதான் – அமைச்சர் செந்தில் பாலாஜி
மானிய மின்சாரம் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு.
அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகிறது.
அதற்குள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். மேலும் தமிழ்நாட்டில் இப்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்போது 2.66 கோடி மின் இணைப்புகள் உள்ளன. தற்போது வரை சுமார் 60 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள மின் இணைப்புகள் ஆதார் என்னுடன் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வரும் டிசம்பர் 35ம் தேதிக்குள் மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலவச மின்சாரம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஒருவர் எத்தனை மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் அத்தனை மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இது தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் எதுவும் இல்லை. இருப்பினும் மானிய மின்சாரம் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார். இதற்காக மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.