இந்தியாவில் நடைபெறும் 62% சாலை விபத்துகளுக்கு அதிவேகம் தான் காரணமாகும் என்றும்,அனைத்து சாலைகளில் வேகவரம்பு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி நான்கு வழிச்சாலையில்,நேற்றைய தினம்,நாகர்கோவிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து எதிர்புறம் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில்,உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நெல்லையில் அதிவேகமாக வந்த மகிழுந்து கவிழ்ந்து, சாலைத் தடுப்பைத் தாண்டி எதிர்திசையில் இரு சக்கர ஊர்தி மீது மோதியதில் மருத்துவ மாணவிகள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவ மாணவிகள் கொல்லப்பட்ட விபத்துக்கு அதிக வேகம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் 62% சாலைவிபத்துகளுக்கு அதிவேகம் தான் காரணமாகும். அதைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்நீதிமன்ற ஆணைகளை அரசுகள் பின்பற்றுவதற்கு மாறாக மீறுவது கண்டிக்கத்தக்கது!
அனைத்து சாலைகளில் வேகவரம்பு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும். விதிமீறலை கட்டுப்படுத்த அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வேகக் கண்காணிப்பு கருவிகள் பொறுத்தப்பட வேண்டும். விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…
உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர்…