“இந்தியாவில் நடைபெறும் 62% சாலை விபத்துகளுக்கு இதுதான் காரணம்” – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

Default Image

இந்தியாவில் நடைபெறும் 62% சாலை விபத்துகளுக்கு அதிவேகம் தான் காரணமாகும் என்றும்,அனைத்து சாலைகளில் வேகவரம்பு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி நான்கு வழிச்சாலையில்,நேற்றைய தினம்,நாகர்கோவிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து எதிர்புறம் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 மற்றும்  கார் டிரைவர் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில்,உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“நெல்லையில் அதிவேகமாக வந்த மகிழுந்து கவிழ்ந்து, சாலைத் தடுப்பைத் தாண்டி எதிர்திசையில் இரு சக்கர ஊர்தி மீது மோதியதில் மருத்துவ மாணவிகள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவ மாணவிகள் கொல்லப்பட்ட விபத்துக்கு அதிக வேகம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் 62% சாலைவிபத்துகளுக்கு அதிவேகம் தான் காரணமாகும். அதைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்நீதிமன்ற ஆணைகளை அரசுகள் பின்பற்றுவதற்கு மாறாக மீறுவது கண்டிக்கத்தக்கது!

அனைத்து சாலைகளில் வேகவரம்பு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும். விதிமீறலை கட்டுப்படுத்த அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வேகக் கண்காணிப்பு கருவிகள் பொறுத்தப்பட வேண்டும். விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்