ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம்.
சென்னையில் நடந்த விழாவில், ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை பணியாற்றி வருவதாக பேசப்படும் நிலையில், சென்னையில் நடந்த விழாவில், ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட ஒன்பது மாநில போலீசாருக்கு ஜனாதிபதி சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாநிலங்களில் முதலாவதாகவும், இந்தியாவில் 10வது மாநிலமாகவும், ஜனாதிபதியின் சிறப்பு கொடி, தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டிருப்பது, ஒட்டு மொத்த காவல்துறைக்கும் கிடைத்த பெருமை.
மேலும் தமிழகத்தில் டிஜிபி முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். சட்டம் ஒழுங்கை பாதுகாத்து காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல்லுக்கு இணங்க மக்களுக்கும் நாட்டிற்கும் பாதுகாப்பாக இருந்து இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக தமிழக காவல்துறையின் பணிகள் சிறக்க வேண்டும் என பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.
தமிழக போலீசாரின் சேவையை பாராட்டி ஜனாதிபதி சிறப்பு கொடி கிடைத்தது போற்றுதலுக்கு உரியது. இது ஒட்டு மொத்த காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…