பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில்,136 வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வருகிறது.
இதனிடையே,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களுக்கும் கீழ் குறைந்துள்ளது.மேலும்,ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ முதற்கட்டமாக 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே,இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை உயராது என எதிர்பார்க்கப்படுகிறது.இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…