காவிரி விவகாரத்தை தீர்க்க இதுதான் ஒரே வழி.! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.!  

Premalatha vijayakanth

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பாக அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டு அதற்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்த கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பு நிகழ்ந்த பின்னர் செய்தியாளர்களிடைம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஆளுனரை சந்தித்ததற்கான முதல் காரணம் காவிரி விவகாரம் தான். காவிரி ஆற்றில் உரிய அளவு தண்ணீர் இருந்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோர வேண்டும் என ஆளுநரிடம் கேட்டுக்கொண்டோம்.

காவிரி பிரச்சனை இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஒவ்வொரு வருடமும் கர்நாடகாவை எதிர்நோக்கி தான் நாம் இருக்கிறோம். இதற்கு ஒரே தீர்வு தேசிய நதிகளை ஒன்றாக இணைப்பதுதான். காவிரி நமது உரிமை. அதனை கர்நாடக அரசு விட்டுதர வேண்டும்.

தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது எனவும் , தமிழக முதலவரை இழிவுபடுத்தியும் கர்நாடகாவில் பலர் போராடுவது வேதனைக்குரிய ஒன்றாகும். நம்ம நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு செல்கிறார். வருகிறார் ஆனால் ஒன்றும் நடந்த மாதிரி இல்லை.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கூறுகிறார். அவர் அப்படி எல்லாம் சொல்ல கூடாது. கர்நாடகாவில் தமிழர்களை அடிப்பது பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு, அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என சிரித்துக்கொண்டே கூறுகிறார். இது நகைச்சுவை இல்லை. இது மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டிய கடமை என கூறினார்.

அடுத்து என்எல்சி விவகாரம் பற்றி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், என்எல்சி விவகாரத்தில் பல ஆண்டுகளாக, நமது மக்கள் நிலத்தை கொடுத்து, நிரந்தர வேலை இல்லாமல், உரிய இழப்பீடு இல்லாமல் இருந்து வருகிறார்கள் அவர்களுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதன்முதலாக விருத்தாச்சலம் தொகுதியில் ஜெயித்தது முதல் இந்த பிரச்சனையை பார்த்து வருகிறோம் என்றார்.

அடுத்து, நமதுமீனவ மக்களுக்கு மீன்பிடிக்க செல்லும் இடங்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதற்கு நிரந்தர தேர்வு கட்ச தீவு மீட்பு மட்டுமே. அதனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்