இது மட்டும் தான் வருத்தம்., மற்ற எல்லாம் வரவேற்கத்தக்கது – துணை முதல்வர்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பல கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பல கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதாக, அதனை வரவேற்பதாகவும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மூலதன செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5.54 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
15-ஆவது நிதிக்குழுவின் இறுதி அறிக்கையில் தமிழகத்தின் பங்கினை குறைத்து பரிந்துரைத்தது வருத்தம் அளிக்கிறது. 2021-22 முதல் 2025-26 வரை 4.09% ஆக குறைத்து பரிந்துரைத்தது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஏனைய திட்டங்களின் கீழ் தமிழகத்திற்கு கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025