இதுவே திமுகவின் கடைசி ஆட்சி காலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை – அண்ணாமலை

கடவுள் இருக்கிறார் என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் தனியார் மஹாலில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், கடவுள் இல்லை என்று சொல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுர முத்திரையை பயன்படுத்துகிறார். கடவுள் இருக்கிறார் என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதுவே திமுகவின் கடைசி ஆட்சி காலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை. பாஜக அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராக உள்ளது. தற்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அடுத்த 5 வருடங்களில் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பர் எனவும் கூறினர்.
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. திமுக ஒரு குடும்ப அரசியல் கட்சி, பாஜக மட்டுமே பொறுப்புகள் உங்களை தேடி வரும். வழக்கு போட்டு மிரட்டினாலும், எதற்கும் பயப்பட கூடிய ஆள் இல்லை என தெரிவித்தார். அடைகாத்த கோழி போல பொத்தி பொத்தி வைத்தாலும் உதயநிதி ஸ்டாலினை எப்போதும் தலைவராக முடியாது என்றும் முன்னதாக தெரிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025