பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்.!
தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கியது. 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், பாலிடெக்னிக் கல்லூரியில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த இயக்குநகரத்தின்கீழ், 57 கல்லூரிகளும் 19,120 இடங்களும் உள்ளன. விண்ணப்பங்களை கல்லூரிகளில் நேரில் சென்றும் அல்லது இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150 வசூலிக்கப்படுகிறது.