இது அநாகரிகத்தின் உச்சம்… அதிகார போதையின் வெளிப்பாடு – அண்ணாமலை கருத்துக்கு ஜோதிமணி எம்.பி ட்வீட்
இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவரிடமிருந்து இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம் வெளிப்படுவது வருத்தத்திற்குரியது என ஜோதிமணி எம்.பி ட்வீட்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை, எனது செருப்புக்கு சமமில்லை என தெரிவித்திருந்ததற்கு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘அரசியலில் கடுமையான கருத்து மோதல்கள் இருக்கலாம்.ஆனால் அது அநாகரிகமாக,கண்ணியக்குறைவாக இருக்கக்கூடாது. மிகச்சிறந்த அறிவாளியும், நிர்வாகியுமான நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை எனது செருப்புக்கு சமமில்லை என்று சொல்வது அநாகரிகத்தின் உச்சம். அதிகார போதையின் வெளிப்பாடு.
இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவரிடமிருந்து இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம் வெளிப்படுவது வருத்தத்திற்குரியது. அரசியலில் நம்பிக்கையுள்ள இளைஞர்களைக் கூட இதுபோன்ற அரசியல் கலாசாரம் வெறுப்படைய வைத்துவிடும்.’ என பதிவிட்டுள்ளார்.
இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவரிடமிருந்து இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம் வெளிப்படுவது வருத்தத்திற்குரியது. அரசியலில் நம்பிக்கையுள்ள இளைஞர்களைக் கூட இதுபோன்ற அரசியல் கலாசாரம் வெறுப்படைய வைத்துவிடும்.
— Jothimani (@jothims) September 1, 2022