தமிழகத்தில் முதல் முதலில் தொடங்கப்பட்ட மகளீர் கல்லூரி இதுதான் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ராணி மேரி கல்லூரிக்காக போராடியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று என பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பட்டம் பெறுபவர்கள் கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதிலிருந்து அல்ல. பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணி மேரி கல்லூரி திகழ்கிறது. தமிழகத்திலேயே முதல் முதலாக தொடங்கப்பட்ட மகளிர் கல்லூரி ராணி மேரி கல்லூரி தான்.
மாணவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். மேலும் மேலும் படிக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரிகள் தங்களது அடுத்த தலைமுறையே படிக்க வைக்க வேண்டும். பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை திமுக தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ளது.
ராணி மேரி கல்லூரிக்காக போராடியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று. ராணி மேரி கல்லூரியை இடிக்க கடந்த கால அதிமுக அரசு முயன்றது. அதை எதிர்த்து போராடிய கல்லூரி மாணவிகளுக்கு திமுக சார்பில் நேரில் ஆதரவு அளித்தேன். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக என்னை போலீசார் கைது செய்தனர் என தெரிவித்துள்ளார்.