இப்படி ஒரு கேடுகெட்ட உலகத்துல பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது.!
நேற்றைய தினம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 7 வயது சிறுமியின் சம்பவம் குறித்து வேதனையான பதிவை ரத்ன குமார் பதிவிட்டுள்ளார்.
மேயாதமான், ஆடை உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ரத்ன குமார். தற்போது இவர் விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து வசன கரத்தாவாக பணியாற்றியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நேற்றைய தினம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தூக்கி எறிந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு எதிராக பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ரத்ன குமார் கூறியதாவது, அந்த குழந்தை முக கவசம்லாம் போட்டுட்டு சிரிச்சி பேசி விளையாடிட்டு இருந்திருக்கா டா டேய். கெடுத்து கொன்னுட்டீங்களே டா , இப்படி ஒரு கேடுகெட்ட உலகத்துல நான் ரெண்டு பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.