தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த குழுவின் உறுப்பினர்களான எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், எஸ்.நாராயண் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் செயலர் கிருஷ்ணன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், முதல்வர் என்பது ஸ்டாலின் மட்டுமல்ல. அது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் திராவிட மடல் என்பது அனைத்து சமூகங்களையும், மாவட்டங்களையும், பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான். தமிழ்நாடு அரசு 55 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய் கடனிலுல் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், நிதி ஆதாரம் விரல்விட்டு எண்ணத்தக்க சில துறைகள் மூலமாக மட்டுமே வருவதாகவும், வரி வசூலில் இருந்த மாநில உரிமைகள் மத்திய அரசு ஜிஎஸ்டி மூலமாகப் அழித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. அது சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் தான் நிற்கும் என்றும், வளர்ச்சியும் அதன் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…