திராவிடத்தால் தமிழகம் அடைந்த வளர்ச்சி இதுதான் – கனிமொழி ட்வீட்
பாஜக ஆளும் மாநிலங்கள் ஏன் தமிழகத்தை விட பின்தங்கியுள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று புகைப்படத்துடன் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
திராவிடத்தால் தமிழகம் அடைந்த வளர்ச்சி இதுதான் என்று திமுக மகளிரணி தலைவர் எம்.பி கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகம் ஏறத்தாழ இதர அனைத்து மாநிலங்களைவிடவும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் ஏன் தமிழகத்தை விட பின்தங்கியுள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று புகைப்படத்தில் உள்ளதை சுட்டிக்காட்டி பகிர்ந்துள்ளார்.
திராவிடத்தால் தமிழகம் அடைந்த வளர்ச்சி இதுதான். தமிழகம் ஏறத்தாழ இதர அனைத்து மாநிலங்களைவிடவும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. பிஜேபி தலைவர்கள், பிஜேபி ஆளும் மாநிலங்கள் ஏன் தமிழகத்தை விட பின்தங்கியுள்ளது என்பதை விளக்க வேண்டும்.
1/2 pic.twitter.com/BQrbhwEVA8
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 26, 2020