தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது – கமலஹாசன்
தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், இந்தியா கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளது இலங்கைக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருப்பதை குறிக்கிறது.
இந்தியாவின் இந்த செயலுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.’ என பதிவிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.
— Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2021