அண்ணாமலையின் சாதனை இதுதான்..! – காயத்ரி ரகுராம்
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து அண்ணாமலை மீது அவர் தொடர் விமர்சங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், தற்போது அண்ணாமலை குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், பெண்களை அவதூறாக பேசுபவர்களை தனது கூட்டாளியாக வைத்துக்கொண்டு பெண்களுக்கு ஏற்படும் அமைதிகளை புறம் தள்ளுவதுதான் அவரது சாதனை. சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வு பரப்ப ஒரு குழுவை உருவாக்கியதே அவரின் மிகப்பெரிய சாதனை என விமர்சித்துள்ளார்.