வெற்றிக்காக முக ஸ்டாலின் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார் என பரப்புரையில் முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓமலூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்று கூறி, திமுக தலைவர் முக ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். அவர் போடாத வேடமே இல்லை, அத்தனை வேடம் போட்டு, எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறார் என விமர்சித்துள்ளர்.
இந்த அரசின் மீது குற்றசாட்டுகளை சொல்லி, அவதூறு பிரச்சாரத்தின் மூலமாக ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு கொண்டியிருக்கிறார். அந்த கனவு பலிக்காது என தெரிவித்துள்ளார். அதிமுக மக்களுக்காக உழைக்கும் இயக்கம். கூட்டணி தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்கள். ஒருமித்த கருத்துக்களை ஒன்றாக அமைத்த வெற்றி கூட்டணி என கூறியுள்ளார்.
திமுக காலத்திற்கு ஏற்றவாறு கூட்டணி அமைத்துக்கொள்வார்கள். அது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சித்தார். அம்மாவின் ஆட்சியை நான் சிறப்பாக வழிநடத்தி வருகிறேன். தமிழகத்தில் எத்தனையோ மாவட்டங்கள் இருக்கிறது. ஆனால், சேலம் மாவட்டத்தில் இருந்துதான் முதலமைச்சராக இருக்கிறோம். இது சேலத்துக்கு கிடைத்த பெருமை என கூறி வாக்கு சேகரித்தார் முதல்வர் பழனிசாமி.
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…